Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 21 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம். றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
மல்லாகம் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர், தெல்லிப்பழை பொலிஸாரால், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் - 1, சைக்கிள்கள் -4 , அலைபேசிகள் -3 , வாள் - 1 என்பன கைப்பற்றப்பட்டன.
அண்மையில், மல்லாகம் நீதிமன்ற நடவடிக்கைக்காக வந்திருந்த ஒருவர், தனது 3 அலைபேசிகளை ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழான தொட்டியில் வைத்து பூட்டிவிட்டு நீதிமன்றுக்குள் சென்றுள்ளார்.
வழக்கு முடிவடைந்து வெளியே வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இது தொடர்பில், அவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நீதிமன்றில் நிலுவையுள்ளன.
அத்துடன், சந்தேக நபரிடமிருந்து திருட்டுப்பட்ட அலைபேசிகளை வாங்கி உடமையில் வைத்திருந்த மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025