Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 03 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் போது, குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய முயன்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திலேயே குறித்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தான் பயணித்த வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் சரணடைய வைக்கும் நோக்குடனேயே சட்டத்தரணி அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிலையில், அதனை அறிந்த பருத்தித்துறை பொலிஸார், சட்டத்தரணி அழைத்து வந்த சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கைது செய்ய முயன்றுள்ளனர்.
அதனால் சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago