2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல்

Editorial   / 2022 ஜனவரி 27 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

“நீதிக்கான அணுகல்” எனும் தொனிப்பொருளில், நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட வட மாகாண நடமாடும் சேவையும் விழிப்புணர்வும், கிளிநொச்சியில் இன்று (27) நடைபெற்றன.

இந்நிகழ்வுகளை, நீதி அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு, அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

நீதி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம், சட்ட உதவி ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் போன்றவற்றின் பங்கேற்புடன், மக்களுக்கான சேவை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்போது பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குகான வாழ்வாதார உதவிக் கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுக் கொடுப்பனவு  சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கொடுப்பனவுகள் என்பனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X