2025 மே 14, புதன்கிழமை

நீராவியடி வருடாந்தப் பொங்கல் விழா: நாளை நடைபெற ஏற்பாடு

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

பொலிஸாரின் தடையைத் தகரத்து, முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொங்கல் விழா, நாளை (24) நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் இணைந்து, பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளில், இன்று (03) ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக, கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு  வந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும், கோவில் சூழலில், தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்தனர்.

தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அதை எழுத்துமூலம் அறிவிக்குமாறு கோரினர்.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி பொலிஸார், அங்கிருந்து விலகிச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X