2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடல்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்துவருகின்றனர்.

அதற்கு உள்ளுர் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன், நிபந்தனையற்று, உடனடியாக வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அந்நிலையில் இன்று (08) காலை முதல் யாழ். பண்ணைப்பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .