2025 மே 14, புதன்கிழமை

நீர் அள்ளிய யுவதி பலி

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வீட்டுக் கிணற்றில் நீர் அள்ளிய யுவதி ஒருவர், கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம், நல்லூரடியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

செம்மணி வீதி - நல்லூரடியை சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி (வயது 25) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் குறித்த யுவதி நேற்று மாலை, கிணற்றில் அள்ளியுள்ளார். இதன்போது கப்பியின் கயிறு காலில் சிக்குண்டத்தில், தண்ணி வாலியுடன் இழுபட்டுள்ளது. இதனால் யுவதி கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

யுவதியின் அவலக் குரலை கேட்ட அயலவர்கள் கிணற்றுக்குள் இருந்து யுவதியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் யுவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X