2025 மே 16, வெள்ளிக்கிழமை

’நுளம்புகளுக்கு புகை அடிக்க இயந்திரங்கள் வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நுளம்புகளுக்கு புகை அடிக்கும் பத்தொன்பது இயந்திரங்களில் பத்து இயந்திரங்கள் பழுதடைந்துவிட்டதால், உள்ளூராட்சி சபைகள் குறைந்தது இரண்டு இயந்திரங்களை கொள்வனவு செய்து தரவேண்டும் என, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதிஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயாலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பணத்தில் பத்தொன்பது நுளம்புகளுக்கு புகை அடிக்கும் இயந்திரங்களில் பத்து இயந்திரங்கள் முற்றாக பழுதடைந்து விட்டன. மிகுதியாக உள்ள ஒன்பது இயந்திரங்களை வைத்தே மாவட்டம் முழுவதும் புகை அடித்து வருகின்றோம். புகை அடிக்கும் இயந்திரங்கள் தொடர்பில் சரியான பராமரிப்பு முறைமை இருக்கமையினாலேயே இவை அனைத்தும் பழுதடைந்துள்ளன.

“மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிடமும் நாம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். ஒவ்வோர் உள்ளுராட்சி சபைகளும் குறைந்தது இரண்டு நுளம்புகளுக்கு புகை அடிக்கும் இயந்திரங்களையாவது கொள்வனவு செய்து தர வேண்டும். அப்போதுதான் உள்ளூராட்சி சபைகளும் சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து மக்களுக்கான சேவைகளை செய்ய முடியும். எனவே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் செயலாளர்களும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.

“மேலும், நுளம்புகளுக்கு அடிக்கும் புகைக்கான இரசாயன பொருள்கள் கையிருப்பில் இல்லை. எனவே அந்தப் பொருள்களையும் அனைத்து சபைகளும் கொள்வனவு செய்து தந்தாள் நாம் மிக விரைவாக செயற்பட்டு நுளம்பு பெருக்கங்களை கட்டுப்படுத்த முடியும். எனவே இதனை அவரச தேவையாக கருத்தில் எடுத்து செயற்படுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .