2025 மே 01, வியாழக்கிழமை

நெற் செய்கை யானையால் துவம்சம்

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா, ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த காணிக்குள் புகுந்த யானை அங்கிருந்த நெற் செய்கையை மிதித்து துவம்சம் செய்துள்ளது.

ஆசிகுளம் வயல் பகுதியில் தொடர்ச்சியாக யானையின் பாதிப்க்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், நேற்று இரவும் யானை, ஓர் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலத்தை சேதப்படுத்தியுள்ளது.

பசளை இன்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது யானையின் பாதிப்புக்களுக்கும் முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .