2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நெடுந்தீவில் வேலைவாய்ப்புக்கள் இல்லை

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ். நெடுந்தீவு பிரதேசத்தில் கூடுதலான இளைஞர் மற்றும் யவுதிகள் வேலைவாய்ப்புக்கள் இன்றிக் காணப்படுவதாகவும் இவ்வாறான இளைஞர், யுவுதிகளின் எதிர்காலம் தொடர்பில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நெடுந்தீவிலுள்ள  ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், தற்போது ஆயிரம் வரையான இளைஞர் மற்றும் யுவதிகள் வேலைவாய்ப்புகள் இன்றி இருப்பதாகவும் இவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நெடுந்தீவிலிருந்து வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலைசெய்வதற்குக்கூட வெளியிடங்களுக்கே செல்லவேண்டியுள்ளது.

அவ்வாறு வெளியிடங்களில் சென்று  தொழில் செய்யும் போது, அதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், வீட்டு வாடகை, போக்குவரத்து, உணவு என செலவுகள் அதிகமாகவுள்ளது.

இதனைலேயே இங்குள்ள இளைஞர், யுவதிகள் வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இங்குள்ள இளைஞர் மற்றும் யுவதிகளை பயன்படுத்துவதற்கும் இங்கு தொழில் வாய்ப்பின்றியுள்ள இளைஞர் யுவுதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க கூடிய விதத்திலும் தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவ தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நெடுந்தீவு பிரதேச மக்களும் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .