2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

வடக்கு மாகாண சபை வினைத்திறனுடன் இயங்குவதற்கு நியதிச் சட்டங்கள் அவசியமென, வடக்கு மாகாண சபையில் வியாழக்கிழமை (30) அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 89ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவையின் பிரதித் தலைவர் வ.கமலேஸ்வரன் தலைமையில், வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இதன் போது நியதிச் சட்டங்கள் தொடர்பான வாதமொன்றின் போதே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியதிச் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக இருந்தது. இது தொடர்பில் நிகழ்ச்சி நிரலிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது அத்தகைய நியதிச் சட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

முதலமைச்சர் சி.வி.விகனேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சுகயீனம் காரணமாக அவைக்கு வருகை தராமையால், நியதிச் சட்டங்கள் தொடர்பில் அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .