Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 02 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை ஏமாற்றி நகைகளை அபகரித்து வந்த நபரை, வெள்ளிக்கிழமை 01) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதானவர் புதிய செம்மனி வீதி கல்வியங்காடு பகுதியினை சேர்ந்த 46 வயதுடைய நபர் எனவும் குறித்தநபர் திருடி விற்ற 11 ½ பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம், தான் வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் போல் இனங்காட்டி, நோயாளர்களுக்கு உதவி செய்வார். மற்றவர்கள் நம்பிக்கை வைத்துக்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் இவர், சத்திரசிகிச்சை மற்றும் இதர பரிசோதனைகளுக்கு செல்லும் போது நகைகளை தானே வாங்கி வைத்து பாதுகாப்பது போல் பாசாங்கு செய்து திருடுவதனை வழக்கமாக கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி வைத்தியசாலைக்கு வந்த நோயாளி ஒருவரின் 2½ பவுண் நகையினை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில், நகையினை பறி கொடுத்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொhலிஸார், சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த வருடம் நவம்பர் மாதம்; 18ஆம் திகதி இரண்டு சோடி காப்பு (3பவுண் நகை) வைத்தியசாலையில் வைத்து திருடியமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நல்லவர்கள் போல் நடித்து நகைகளை திருடும் நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனனர்.
மேலும் வைத்தியசாலை வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் 021 222 2222 என்ற பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
17 minute ago
20 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
49 minute ago