2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நீர்த்தேக்கமொன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தையும் பூநகரியின் தேவன்குளத்தையும் இணைத்து நீர்த்தேக்கமொன்றை அமைத்துத் தருமாறு வன்னேரிக்குளம், ஜெயபுரம் கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயளாலரிடம்; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளத்தின் கீழ் தற்போது 375 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. 1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெயபுரம் கிராம மக்களுக்கென தேவன்குளத்தின் கீழ் 526 ஏக்கர் வயல் நிலத்துக்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், குளம் புனரமைக்கப்படாததன் காரணமாக தேவன் குளத்தின் கீழான வயல்நிலக் காணிகள் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், வன்னேரிக்குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து உருவாக்கப்படும் பெரும் நீர்த்தேக்கத்தின் கீழ் குறைந்தது 1,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளமுடியும். அத்துடன் உவரடைந்துவரும் வன்னேரிக்குளத்தின் பகுதிகள் உவராபத்திலிருந்து பாதுகாக்கப்படும் என அப்பகுதி சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X