2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நெற்களஞ்சிய சாலை திறந்து வைப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில்  யு.என். கபிரட் நிறுவனத்தினால் ஜப்பானிய அரசினது நான்கு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையை இன்று வெள்ளிக்கிழமை (02) கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் வகையில் களஞ்சியமொன்றை அமைத்து தருமாறு விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் யு.என். கபிரட் நிறுவனத்தினால் ஜப்பானிய அரசினது நான்கு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட நெற்களஞ்சிய சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆனையாளர் ஈ.தயாரூபன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை  மற்றும் விவசாயஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X