Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு, கிழக்கு மாகாண சங்கங்களின் பிரதிநிதிகளை ஞாயிற்றுக்கிழமை(07) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உள்நாட்டு செயல்முறைகளிலும் உள்நாட்டு ஆணைக்குழுக்களிலும் தாம் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளதாகவும் 'நிலைமாறு கால நீதி வழங்கல்' செயற்பாட்டு முன்னெடுப்புகள் யாவும் இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பரிகார நீதியே தமது காயங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமையும் என்று தாங்கள் உணர்வதாகவும் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆணையாளரிடம் வலியுறுத்தினர்.
ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சமகால பிரச்சினைகள், குறைகள், தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட ஆணையாளர், தம்முடன் நேரடி தொடர்பிலிருக்குமாறு கூறி தனது விருந்தினர் அட்டையை சங்கங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
ஆணையாளருடனான சந்திப்பில், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு, கிழக்கு மாகாண சங்கங்களின் சார்பில் திருமதி ஜெ.நாகேந்திரன், திருமதி அமலி, திருமதி செல்வராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025