Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 21 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்களாகிய என். சிறீகாந்தாவுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொதுவெளியில் பகிரங்க விவாதம் நடாத்துவதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், “எனக்கு விடுத்த சவாலுக்கு பதிலளித்து விட்டேன்” என்றார்.
பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவரின் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்புச் செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால் கூட பரவாயில்லை என்றார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடா்பாக, யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று (21) ஊடகவியலாளர்களை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், “கஜேந்திர குமார் பொன்னம்பலத்துடன் 4 தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டி சாட்டுக்களை கூறிக்கொண்டு அவர், ஓடுகிறார். அவரைத் துரத்திப் பிடிக்கும் அவசியம் எமக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதிக்க நான் தயார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago