2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பக்தர்களை பயமுறுத்திய அம்பியூலன்ஸ்

Princiya Dixci   / 2021 மே 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்.தென்மராட்சி பகுதியில் கோவில் திருவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள், அம்பியூலன்ஸைக் கண்டதும், பி.சி.ஆர் பரிசோதிக்க வருவதாக எண்ணி, சிதறியோடிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மீசாலை வேம்பிராய் கல்லடி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவத் தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, கொவிட் 19 சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை மீறி பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அது தொடர்பில் அறிந்து கோவிலுக்குச் சென்ற பொலிஸார், சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை பேணி திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தி, 50 பக்தர்கள் மாத்திரம் திருவிழாவில் கலந்துகொள்ள முடியும் எனவும் ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை அடுத்து 50 பேருடன் தேர் திருவிழா நடைபெற்றது. ஏனையோர் அருகில் இருந்த வயல் வெளிகளில் சிதறி நின்றிருந்தனர்.

50 பேருடன் தேர் இழுத்து, தேர் இருப்புக்கு வந்ததும் பொலிஸார் கோவிலில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

அதனை அடுத்து மீண்டும் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் கூடினார்கள்.

அந்நேரம் அப்பகுதி வீதியில் அம்பியூலன் வந்துள்ளது. அதனை கண்ணுற்ற கோவிலில் நின்ற பக்தர்கள், பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுகாதாரப் பிரிவினரை பொலிஸார் அழைத்து வருவதாக நினைத்து, அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

எனினும், அம்பியூலன் அப்பகுதி ஊடாக வேறு இடத்துக்குச் சென்று மறைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X