2025 மே 09, வெள்ளிக்கிழமை

படகில் சென்று ஸ்டாலினை சந்திப்போம்: மீனவர்கள் எச்சரிக்கை

Editorial   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பு.கஜிந்தன்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து  இந்தியாவுக்கு படகு மூலம் சென்று  பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.

இந்தியாவின் தமிழகத்துக்குஇ  14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில்  திங்கட்கிழமை (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் புனித பிரகாஸ்இ இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம். 

குறித்த மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் காத்திரமான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த நிலையிலேயே குறித்த முடிவை எட்டியதாக தெரிவித்தார்.

14 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிடில் அடுத்து வரும் நாட்களில் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X