Mayu / 2024 மே 02 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினத்திற்குமிடையிலாள படகுச்சேவை மே இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை(02) மட்டக்களப்பு காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்: . காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் படகுச் சேவையை ஆரம்பித்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாஇ படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் படகுச்சேவை ஆரம்பிக்கப்படும். என தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைத்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர்,
அது தொடர்பில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம்.
முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025