2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

படிக்கட்டில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தின் மேல்மாடியில் வெளிப்புறமாக படிக்கட்டில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் பொலிஸ் விசாரணையில் உள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X