2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘படைவீரர்களும் மனிதாபிமானம் உள்ளவர்களே’

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“படைவீரர்களும் மனிதாபிமானம் உள்ளவர்களாவர்” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வவுனியா - புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் மாணவர் வள நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம் செய்த காலம் மாறி, அவர்கள் இடமாற்றம் பெற்று செல்லும் போது கண்ணீர் மல்க வழி அனுப்பிய நிகழ்வு, இன்று சர்வதேச ரீதியாக பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

கிளிநொச்சி - விஸ்வமடு பகுதியில் கடமையாற்றிய கேணல் ரத்ணப்பிரிய பந்து இடமாற்றம் பெற்று அம்பேபுஸ்ஸ பகுதிக்குச் செல்லும் அந்த நிகழ்வு, இன்று ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் கடந்த 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் தன்னாலான  பல சேவைகளை செய்துள்ளார்.

“எனவே, படை அதிகாரிகள் என்பவர்கள் வெறுமனே யுத்தம் செய்வது என்று இல்லாமல், இதற்கு அப்பாற் சென்று மனிதாபிமான ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை இவர் தனது செயலின் மூலம் செய்து காட்டியிருக்கின்றார். இதனை அனைவரும் பின்பற்ற முடியுமாக இருந்தால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“மேலும், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், எங்களுடைய நாட்டின் பிரச்சினைக்கு மிக இலகுவாக தீர்வு காணமுடியும்.

“அத்துடன், அவிருத்தி என்பது, இன்றைய காலகட்டத்தில் அதுவும் விசேடமாக வட பகுதி மக்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X