Freelancer / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமாக பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி டிடி, KPY பாலா, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், புகழ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதில் தமன்னாவின் நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் ஹரிஹரனின் பாடல்கள் மனதை தொட்டது.
நன்றாக நடந்துகொண்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் வந்ததுள்ளனர். இதில் விசமிகள் கூட்டத்திற்குள் புகுந்து செய்த சில விஷயங்கள் காரணமாக தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த NORTHERN UNI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் 'இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்றும் தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்' என்றும் தெரிவித்துள்ளனர். R


10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025