Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வங்கி கணக்கு மூடப்பட்ட நிலையில், மறுக்கப்பட்ட காசோலையினை வழங்கிய நபரை கடுமையாக எச்சரிக்கை செய்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வழங்க வேண்டிய பணமான 1 இலட்சத்து 25ஆயிரம் ரூபாயை பணமாக செலுத்துமாறு குற்றவாளிக்கு, வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த நபர், 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்திருந்தார். அதற்காக அவர் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையினை வழங்கியுள்ளார்.
காசோலையாக வழங்கப்பட்ட குறித்த வங்கி கணக்கு மூடப்பட்டிருந்தினால் வழங்கிய காசோலை மீளவும் திரும்பியுள்ளது.
இது தொடர்பில் பொருள் கொள்வனவு செய்த நபரிடம் பல முறை கேட்டும் அவர் பணத்தினை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இது தொடர்பிலலான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago