2025 மே 09, வெள்ளிக்கிழமை

பதவியைத் துறந்தார் ஐங்கரன்

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

வடமராட்சி தெற்கு, மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் தவிசாளரான தங்கவேலாயுதம் ஐங்கரன், தனது பதவியிலிருந்தும் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய, தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் கடிதம் மூலம், தனது  பதவி விலகலை அறிவித்துள்ளதாக, ஐங்கரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால், அந்தப் பதவியில் நீடிக்க தான் விரும்பவில்லை என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X