2025 ஜூலை 19, சனிக்கிழமை

பதில் காணி வழங்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மக்களின் காணிகளுக்கு, பதில் காணி வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் காணிகளை சிங்கள மக்களுக்கு கையளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் தமது வயல் காணிகளில் அவர்கள் நெற்செய்கையில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணி தொடர்பான பிணக்குகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு பதிலாக சம்பத்நுவர பிரதேச செயலகத்தில் தெரிவிக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனிச்சிங்கள பிரதேசம் என்பதால் தமக்கு மொழி பிரச்சினை உள்ளதாகவும் தமிழ் மாவட்ட செயலகம் முல்லைத்தீவில் உள்ள நிலையில், தம்மை சிங்கள பிரதேச செயலகத்துடன் எதற்காக இணைத்து கொள்கின்றார்கள் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X