Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 30 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் ஜெனிட்டா மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது தமிழ் மக்களுக்கு ஜனநாயக போராட்டத்தைப் பாதுகாக்கும் என்பதற்காகவும் எமது உரிமைகளை கேட்க முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும், இந்தப் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றத்திலே நிறைவேற்றக் கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.
“நாம் இன்று ஜனநாயக முறையிலும் அகிம்சை வழியிலும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இந்நிலையில், இந்த அரசாங்கமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.
“இதனால் எமது ஜனநாயக போராட்டத்தில் கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம் எமக்குக் கிடைக்காது என்பதால் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அனைவரிடம் கேட்கிறோம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க அடிகோல வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “எங்கே.. எங்கே.. உறவுகள் எங்கே” என்ற கோசங்களையும் எழுப்பியவாறும் “புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நிறுத்து” மற்றும் “புதிய சட்டங்களை இயற்றி, மக்களின் மக்களின் குரலை நசுக்காதே” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago