Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 14 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை மேற்கு பகுதியில் மக்கள் குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில், மக்களின் காணிகளில் உள்ள வேப்பமரங்கள், பனைமரங்கள் போன்றவை வெட்டப்பட்டு களவாடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
'மிதிவெடிகள் உள்ள பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு மிதிவெடி அகற்றல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் இவ்வாறு மரங்கள் களவாக வெட்டிச் செல்லப்படுவதால், மிதிவெடி அகற்றுபவர்களுக்கும் களவாக மரங்கள் வெட்டுபவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்பது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.
வெட்டப்படும் மரங்கள் கிளாலி ஊடாக எழுதுமட்டுவாள் வழியாக சாவகச்சேரிக்கு கொண்டு செல்லப்படுகின்றது' என்றார்.
44 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
57 minute ago