2025 மே 05, திங்கட்கிழமை

’பயிற்சிகளைப் பெற்று சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும்’

Niroshini   / 2020 நவம்பர் 16 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 1 இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்ட நீங்கள் உங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை இழிவளவாக்க, முறையான பயிற்சிகளைப் பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டுமென, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் படையணிக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்தப் பயிற்சி 14 நாள்கள் நடைபெறவுள்ளதாகவும் வறுமை நிலையில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்கள் குடும்ப நிலையை கட்டியெழுப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறதெனவும் கூறினார்.

வேலைவாய்ப்பு இன்மையினால் பல்வேறு சமூகப் பிறழ்வுகள் சமூகத்தில் ஏற்படுகிறதெனத் தெரிவித்த அவர், ஆதலால் அரசாங்கம் இந்தத் தொழில்வாய்ப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளதெனவும் கூறினார்.

எனவே, நீங்கள் இந்தத் தொழில்வாய்ப்பு மூலம் பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளர்களாக மாறுதல் வேண்டுமெனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X