Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் கர்ணன்
“பருத்தித்துறை நகரின் அபிவிருத்தியும், முன்னேற்றமுமே எமது குறிக்கோள். இக்குறிக்கோளை நோக்காகக் கொண்டு, அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என, பருத்தித்துறை நகர சபைத் தலைவர் யோ.இருதயராஜா தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
இச்சபையின் முதலாவது கூட்டம், சபைத்தலைவர் தலைமையில், நகரசபை சபாமண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், “பருத்தித்துறை நகரசபையை அபிவிருத்தி செய்வதற்காகவே, நாங்கள்அனைவரும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, இச்சபைக்கு வந்துள்ளோம். இச்சபையின் தவிசாளராக, நான் பொறுப்பில் இருந்தாலும், உறுப்பினர்களாகிய உங்களது ஒத்துழைப்புகளினதும், ஆலோசனைகளிலுமே, அது தங்கியுள்ளது.
“சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படும் நான், எக் காரணம் கொண்டும், முறையற்ற செயல்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டேன். எனது செயற்பாடுகள் அனைத்தும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவே இருக்கும். ஒளிவுமறைவுகளுக்கு இடமிருக்காது. நகர அபிவிருத்தி கருதி, கட்சிகள் சாதி, மத, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளின்றி, அனைவரும் செயற்படுவோம். இவ்வாறான செயற்பாடுகளினால், நகரின் அபிவிருத்தியை, முன்னெடுக்கலாம்” என்று மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிசை் சேர்ந்த, வி.பாலசுப்பிரமணியம், தனது கன்னி உரையில், “எமது உறுப்பினர்கள் உடனடியாக பிரேரணைகள் எதனையும் சமர்பிக்க மாட்டார்கள். வட்டார மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர்கள், பிரேரணைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளார்கள். வெவ்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக நாங்கள் இச்சபைக்கு தெரிவானாலும், சபை அமைக்கப்பட்ட பின்னர், உறுப்பினர்கள் அனைவரும், நகர அபிவிருத்தி என்ற இலக்கை நோக்கி, ஒரு அணியில் அணிதிரள வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
“ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், பகிரங்கத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரம், சபை அமர்வுகளில் கலந்தாலோசிக்கப்படும் சில முக்கிய விடயங்களில், இரகசியத் தன்மையையும், சபை உறுப்பினர்கள் மத்தியில் பேண வேண்டும். இருப்பினும், இச்சபையில், ஆலோசனைகளை முன்வைக்கின்றேன். அதன் பிரகாரம், ஒரு வட்டாரத்திலிருந்து, வரியிறுப்பாளர் ஒருவர் முன்வைக்கும் முறைப்பாட்டை, சபைத்தலைவர், வட்டார உறுப்பினருடன் தொடர்பு கொண்டு, பிரச்சினையை அணுகவேண்டும். பிரச்சினைகளை இனம் காண்பதற்கு, வட்டார உறுப்பினர்கள், மக்கள் சந்திப்புக்களை, அடிக்கடி நடத்தவேண்டும்” என கூறினார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago