Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
துன்னாலை சம்பவத்தில், பொலிஸ் திணைக்களத்துக்கு 2 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான பீ.ஆர்.சமன்ஜெயலத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தின் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
“இதனையடுத்து, பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பொலிஸ் வாகனம் அடித்து உடைக்கப்பட்டதுடன், ஹெட்டி பொல சந்தியில் இருந்த பொலிஸ் காவலரணும் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டது. மேலும், மேலதிக கடமைக்கு வருகை தந்திருந்த பொலிஸ் விசேட அதிரப்படையினரின் வாகனமும் கலவரக்காரர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டது.
“இதன்போது, ஹெட்பொல சந்தியில் இருந்த பொலிஸ் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதனால் 1 இலட்சம்து 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“இதேவேளை, துன்னாலை பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வருகை தந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் சேதமாக்கப்பட்டதில், 1 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாயும் பருத்தித்துறை பொலிஸ் வாகனம் இரண்டு சேதமாக்கப்பட்டமை குறித்து 30 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மேலும், துன்னாலை பகுதியில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான கொடிகாமம் - நெல்லியடி வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டதால் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது.
“இச்சம்பவம் தொடர்பில், வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025