2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை சந்தையை மூடுவது தொடர்பில் ஆராய்வு

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் இருந்து, இன்று (15) 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில், கொரோனா தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று (15) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, ஐவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில்,பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X