2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பறிக்கப்பட்ட வீடு மீண்டும் வழங்கப்பட்டது

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 10:27 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

காரைநகரில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீடு, நேற்று  (06) மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன், குறித்த வயோதிபப் பெண், நேற்று (06) மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார்.

காரைநகர் - வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற குறித்த வயோதிபப் பெண், தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் உறுதி எழுதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஈடு வைத்தார்.

உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால், ஈடு பிடித்தவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்த வீடு, ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.

“அவர்கள் வரும்போது, பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்” என, அபப்பெண் அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து, பணத்தைத் திரட்டி அனுப்பியதன் பயனாக, ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலுத்தி, அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு அவ்வயோதிபப் பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • mohamed Thursday, 07 September 2017 06:48 AM

    nalla ullamgal vallha

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .