2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவன் மரணம்; சிசிடிவி பதிவுகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்  உயிரிழந்த வீட்டை சுற்றி உள்ள சிசிடிவி கமெராக்களின் பதிவுகளையும் மாணவன் பாவித்த அலைபேசியின் உரையாடல் பதிவுகளையும் ஆராயுமாறு, யாழ்ப்பான நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் வழக்கு, நீதிவான் நீதிமன்றில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது, நீதவான் மேற்படி கட்டளையை பிறப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .