2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Freelancer   / 2023 நவம்பர் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடி வியாழக்கிழமை (09) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் "நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்" என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார். இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது. 

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புதன்கிழமை (08)  கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை எதிர்த்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X