2025 மே 02, வெள்ளிக்கிழமை

பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை - முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் பளை முல்லையடியைச் சேர்ந்த 13 வயதுடைய  ராஜபாஸ்கரன் ஜதுர்சிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம் தப்பி சென்ற நிலையில், சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .