2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பளை வைத்தியருடன் தொடர்பு; மூவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பளை வைத்தியத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்று கைதுசெய்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டி பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை, ஞாயிற்றுக்கிழமை இரவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த வைத்தியருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரை, நேற்று, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X