2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இரு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், சிகிச்சை பலன் இன்றி, நேற்று வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் வங்காலையை சேர்ந்த பத்திநாதன் ஜேம்ஸ் போல் சூசை (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மன்னாரிலிருந்து நாணாட்டன்கண்டல் சென்று கொண்டிருந்த பஸ்ஸூக்கு எதிரே நின்ற பஸ்ஸொன்று, சடுதியாக திரும்பி மோதியது. இதனால் பஸ்ஸில் நின்று பயணித்த குறித்த இளைஞன் வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

ஊடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .