Princiya Dixci / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்
யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வீடு முற்றாக எரிந்துள்ளது.
அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இரண்டு மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பனவும் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், இன்று (05) மடு தேவாலயத்துக்கு சென்றதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காலையிலேயே குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் திடீரென ஒரு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்ததன் காரணமாக அயலவர்களால் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து மின்ஒழுக்கினால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025