Editorial / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“அரசைப் பாதுகாக்க வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனக் கூறியிருக்கும் நிலையிலும், அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியுள்ளமை, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று (19) மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்துத் கேட்ட போதே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுடைய ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை கNஐந்திரகுமார் எப்பொழுதும் ஆதரித்தவரல்ல. ஐ.நாவில் மனித உரிமைகள் பிரேரணை வந்தபோது அதனை தீவிரமாக எதிர்த்தவர். இந்த நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமென்று கூறியவர்கள் தான் இப்போது இவ்வாறு கூறுகின்றனர்.
மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் திட்டவட்டமாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே கூறி வருகின்றோம்.
நடைமுறைப்படுத்தப்படாத தீர்மானங்கள் சம்மந்தமாகவும், நம்பிக்கையளிப்பதுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதையும் கூற வேண்டிய கடப்பாடுகள் எமக்குள்ளது. அதன் அடிப்படையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளோம்.
அதைச் கூறாமல் விட்டாலும், கூட்டமைப்பு ஒன்றும் பேசவில்லை. அரசுக்கு ஆதரவாக உள்ளது என்று கூறலாம். ஆனால் கூட்டமைப்பு அரசுக்கு எதிராகத் தான் வாக்குமூலமளித்துள்ளது.
எமக்கிருக்கும் ஒரே ஒரு பலம் சர்வதேசம் தான். அரசாங்கத்தை பாதுகாக்கிறோம் என்பது கட்டுக்கதை. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்பது அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகுமா,
கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காகவே செயற்பட்டு வருகின்றது. ஆகையால் அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் இல்லை. அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையையும் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை” என தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025