Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சங்குவேலியில் வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட நபர், செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கிரிவலம் என்றழைக்கப்படுபவர் என்றும் இவர், ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த நபர் பிணையில் வந்ததையடுத்தே, அவரது தலைமையில், சங்குவேலி வாள்வெட்டு மற்றும் கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், குறித்த நபரை மீண்டும் கைது செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago