2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பிரதமர் தலைமையில் தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு நியமனம்

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 457 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், எதிர்வரும் 22ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போ​தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நியமனம் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்படுமெனவும், இனிமேல் எக்காரணம் கொண்டும் தொண்டர் ஆசிரியர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளமாட்டார்களெனவும் குறிப்பிட்டார்.


 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .