2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் தலைமறைவு

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் தலைமறைவாகவுள்ளதாகத் தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார், அவரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தோமெனத் தெரிவித்த பொலிஸார், இதன்போது பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளங்கண்டு அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டனர்.

அந்த விசாரணைகளில் ஊடாக, சிறுமியின் சீருடை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டு பிடித்ததாகவும் இருப்பினும், சிறுமியின் தோட்டை மீட்க முடியவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரதான சந்தேக நபர், தான் இந்தக் கொலையை தனியாகவே செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஏனைய ஐந்து பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, இருவர் நேரடி சாட்சியமாக உள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபருடன் இணைந்து மற்றுமொரு நபரும் கொலை சம்பவம் நடந்த அன்றைய தினம் மாலை, குறித்த சிறுமியை அழைத்து சென்றதைக் கண்டுள்ளதாக, அவ்விருவரும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனரெனக் குறிப்பிட்டனர்.

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரதான சந்தேக நபருடன் சிறுமியை அழைத்து சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தற்போது தலைமறைவாக உள்ளாதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .