2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பிரதேச செயலாளருக்கு கொரோனா தொற்று

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா வடக்கு பிரதேச செயலார் இ.பிரதாபன் மற்றும் அங்கு பணிபுரியும் இரு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் உட்பட வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்துடன், பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார பிரிவினரால் இன்றையதினம் (18) பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .