2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘பிரமதரின் கூற்று வேடிக்கையானது’

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்  

 

இனப்பி ரச்சினைக்கு, இரண்டு வருடங்களுக்குள் தீர்வு என்றும் பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளதென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார்.  

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் விஜயத்தின்போது, இனப்பிரச்சி னைக்கான தீர்வை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பெற்றுக்கொடுக்கப் போவதாகவும் இதனைச் செய்வதற்கு பெரும்பான்மை இல்லை என்றும் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி, உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொடுக்க வேண்டுமாயின், இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்ட ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குள் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

பெரும்பான்மை இருந்த காரணத்தினால்தான், இந்த அரசாங்கமும் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X