2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: நிரபராதியின் மறியல் நீடிப்பு

எம். றொசாந்த்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியென அறிவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியலை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நீடித்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

மாணவி கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்ட இந்திரகுமார், ஊர்காவற்றுறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து, பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் கூறி, கொலை அச்சறுத்தல் விடுத்திருந்தார்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணை, நேற்று முன்தினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி, சந்தேகநபரின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டும் மாணவி கொலை வழக்கில் குற்றம் இளைக்காது தண்டனை அனுபவித்து வந்தவர் என்பதனையும் கருத்திற்கொண்டு, அவரை விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்தார்.

இதனையடுத்து, குறித்த நபரின் விளக்கமறியலை நீடித்த நீதவான், “நீதிமன்றில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சந்தேகநபருக்கு விளக்கமளித்திருந்த போதிலும், நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனவே, சட்டத்தின் பிரகாரம் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த தவணையின் போது கட்டளை பிறப்பிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .