2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு

Editorial   / 2018 மே 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

வடமாகாணத்தில் உள்ளுராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இன்று (11) நடைபெற்றது.

வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம், யு.என்.டி.பி ஆகியவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இக்கருத்தமர்வு இடம்பெற்றது.

யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் இன்று (11) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தமர்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு, சட்டவாக்கம் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .