2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘புதிய கூட்டணி சரியான பாதையில் பயணிக்கும்’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வடக்கு - கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்குமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தமக்கான முழு ஆதரவை மக்கள் எமக்கு தர வேண்டும் எனவும் கோரினார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில், இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டு வருகின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் உட்பட பலர் வெளியேறி இருக்கின்றோம். நாம் இன்று மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டணி வடக்கு - கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X