2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய ஐவர் கைது

க. அகரன்   / 2018 மே 25 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பம்பைமடுவில் புதையல் தோண்டிய ஐவரை நேற்று (24) கைது செய்துள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பம்பைமடு பகுதியில் இரவு வேளை புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவரை பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழவினர் கைது செய்துள்ளதுடன், புதையல் தோண்ட பயன்படுத்தும் கருவி மற்றும் கார், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .