Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, புலம்பெயர் தமிழர்களால் நேற்று (30) லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், பெருமளவிலான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக, காலநிலை மாற்றத்தையும் கருத்தில் கொள்ளாது கலந்துகொண்டனர்.
குறித்த போராட்டமானது, பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணி வரை வரை நடைபெற்றது.
இதுவரையில், இலங்கையில் 140,000க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான உண்மை நிலை என்ன? உயிருடன் உள்ளார்களா? ஐ.நாவே எமக்கான தீர்வு எப்போது, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago