Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியகுளத்தின் தண்டுவான் - ஒதியமலை வீதியில், ஆயிரம் கிராம பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ், 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாலம், நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த பாலம் அமைக்கப்பட்டது. இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டிருந்தது இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் கலந்துகொண்டு, குறித்த பாலத்தை திறந்துவைத்தார்
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் பூ.சிவநேசன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் க.ஜெய்றோசன், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .