Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தர் சிறுமியின் தாத்தா
8 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் தெரிவிக்கையில்,
"கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம். அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,
பின்னர் மருந்துகளை ஏற்றுக் கொண்ட போது கை வீங்கி இருந்தது இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்னபோதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
அதற்கு அடுத்த நாள் வைத்தியரிடம் சொன்ன போது தான் வைத்தியர் பார்வையிட்டு கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை கொண்டு அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று தெரிவித்தனர். இருந்தாலும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை அகற்றப்பட்டுள்ளது.
தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார். இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை,
இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் கவனயீனமே, என சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago